சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் இடைநீக்கம்

DIN | Published: 22nd January 2019 08:20 AM

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் தாமஸ் பயாஸ் அருள் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவர் தாமஸ் பயாஸ் அருள். பெங்களூருவில் உள்ள ஞானபாரதி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக தாமஸ் பயாஸ் அருள்,  அவரது மனைவி அருணா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தாமஸ் பயாஸ் அருளை பணயிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திங்கள்கிழமை உத்தரவிட்டார். தனது நண்பர் ஒருவருக்கு குழந்தையை தத்து எடுப்பதற்காக பெங்களூரு சென்ற நிலையில், அந்தக் குழந்தை கடத்தப்பட்டது என்பது தெரியவந்ததால் தாமஸ் பயாஸ் அருளும், அவரது மனைவி அருணாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

More from the section

நாகம்பட்டி கல்லூரியில் இலக்கிய கருத்தரங்கு


திருச்செந்தூரில் பிப். 28இல் தி.மு.க. சார்பில் கோலப் போட்டி

கோவில்பட்டியில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
சாத்தான்குளம் நூலகத்தில் உலக தாய்மொழி தினம்
அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை