சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

பிப்.10 இல் கோவில்பட்டியில் அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழக மாநில மாநாடு

DIN | Published: 22nd January 2019 02:03 AM

அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கோவில்பட்டியில் பிப். 10 இல் நடைபெறுகிறது. 
இந்த மாநாடு நடைபெறும் மந்தித்தோப்பு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் திங்கள்கிழமை பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது . இவ்விழாவுக்கு, கட்சியின் நிறுவனர் பொதுச்செயலர் எம்.ஜி.ஆர். நம்பி தலைமை வகித்து, பந்தல் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இதில், மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா, மாநில நிர்வாகிகள் அசோக்குமார், விஜயகுமார், தொழிலதிபர் பெரியசாமிப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
பின்னர், கட்சியின் பொதுச்செயலர் கூறியது: எம்.ஜி.ஆரின் கொள்கைகள் என்றும் மக்கள் மனதில் நிற்க வேண்டும். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி தொடங்கப்படுகிறது. வரும் பிப். 10 ஆம் தேதி மாநில மாநாடு கோவில்பட்டியில் நடத்தப்படுகிறது. கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளோம். கட்சிக்கு இரட்டை மின்விளக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

More from the section

நாகம்பட்டி கல்லூரியில் இலக்கிய கருத்தரங்கு


திருச்செந்தூரில் பிப். 28இல் தி.மு.க. சார்பில் கோலப் போட்டி

கோவில்பட்டியில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
சாத்தான்குளம் நூலகத்தில் உலக தாய்மொழி தினம்
அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை