சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் காயம்

DIN | Published: 22nd January 2019 08:20 AM

கோவில்பட்டியில் திங்கள்கிழமை ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் காயமடைந்தார். 
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் 2 ஆவது நடைமேடையில் பாலக்காடு-திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில்  பகல் 12.50 மணியளவில் வந்தடைந்தது. 
இந்த ரயிலில் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்குப் பயணம் செய்த  சின்னம்பாளையம் அண்ணாநகரைச் சேர்ந்த சிவமுருகன் மனைவி முத்துச்செல்வி (25) என்பவர், தனது குழந்தை காலில் அணிந்திருந்த கொலுசு தவறிவிட்டதை எடுப்பதற்காக ரயிலில் இருந்து இறங்கினாராம். 
அப்போது, ரயில் புறப்பட்டதால் முத்துச்செல்வி நடைமேடையில் தவறி விழுந்தார். இதில், காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.

More from the section

நாகம்பட்டி கல்லூரியில் இலக்கிய கருத்தரங்கு


திருச்செந்தூரில் பிப். 28இல் தி.மு.க. சார்பில் கோலப் போட்டி

கோவில்பட்டியில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
சாத்தான்குளம் நூலகத்தில் உலக தாய்மொழி தினம்
"சாத்தூர்- கோவில்பட்டி பேருந்துகளை ரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும்'