வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:  அரசுப் பள்ளி காவலாளி கைது

DIN | Published: 11th September 2018 09:16 AM

செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த காவலாளி போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி(60). அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்த இவர், அந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் செந்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது. 
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கந்தசாமி சிறையில் அடைக்கப்பட்டார்.
 

More from the section


கோஷ்டி மோதல்: ஒருவர் கைது

காணும் பொங்கல் விழா போட்டிகள்
கண்காணிப்பு கேமரா இயக்கிவைப்பு
அரியலூர், பெரம்பலூரில் உழவர் திருநாள் கொண்டாட்டம்
சிறப்பு கூடைப் பந்து போட்டியில்  வென்ற அணிக்கு பரிசளிப்பு