சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

உழவர் பாதுகாப்பு திட்ட முகாம்

DIN | Published: 12th September 2018 07:43 AM

அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற அலுவலத்தில் வருவாய்  துறை சார்பில் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் திருப்பதி முன்னிலை வகித்தார். முகாமில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் திருமண உதவித்தொகை, இயற்கை மரண நிவாரண தொகை உள்ளிட்ட கோரிக்கை  அடங்கிய 112 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டது. 
ஆணைகளை அரியலூர் முத்துலட்சுமி வழங்கினார். முகாமில் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர். விஏஓ சௌந்தர்ராஜன் வரவேற்றார்.

More from the section

"கோடையில் குடிநீர் தட்டுப்பாடு போக்க நடவடிக்கை தேவை'
கூட்டுறவு துறையில் புத்தாக்கப் பயிற்சி
பிப்.17-இல் உடையார்பாளையம்  அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சாலைப் பாதுகாப்பு: சிமென்ட் ஆலைகளுக்கு அறிவுறுத்தல்
எம்.ஆர். கல்லூரியில் நிறுவன மேலாண் பயிற்சி