சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

விவேகானந்தர் உரை தின கொண்டாட்டம்

DIN | Published: 12th September 2018 07:43 AM

அரியலூர் அருகே பள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்திலுள்ள ஊரட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய தினம் கொண்டாடப்பட்டது.
அமெரிக்கா நாட்டிலுள்ள சிகாகோ-வில் கடந்த 1893 செப். 11 ஆம் தேதி நடந்த உலக மதங்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் சுவாமி விவேகானந்தர் பங்கேற்று சொற்பொழிவு ஆற்றினார். அந்த நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில்,இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விவேகானந்தர் சிறப்பு திரைப்படம் காட்டப்பட்டது. 
தொடர்ந்து பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு,பள்ளி தலைமை ஆசிரியை மங்கையர்க்கரசி பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கதிரேசன், உமா ஆகியோர் செய்தனர்.
 

More from the section

"கோடையில் குடிநீர் தட்டுப்பாடு போக்க நடவடிக்கை தேவை'
கூட்டுறவு துறையில் புத்தாக்கப் பயிற்சி
பிப்.17-இல் உடையார்பாளையம்  அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சாலைப் பாதுகாப்பு: சிமென்ட் ஆலைகளுக்கு அறிவுறுத்தல்
எம்.ஆர். கல்லூரியில் நிறுவன மேலாண் பயிற்சி