வியாழக்கிழமை 21 மார்ச் 2019

மோசடி செய்து அரசு உதவித்தொகை பெற்று வந்த முதியவர் கைது

DIN | Published: 24th September 2018 09:37 AM

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே அரசு அதிகாரிகளை ஏமாற்றி உதவித் தொகை பெற்று வந்த முதியவர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் கீழவெளியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (64). இவரது மகன் மருதகாசி ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இதையடுத்து, ராஜமாணிக்கம், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் பெயர் திருத்தம் செய்து, அரசு உதவித் தொகை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஜயங்கொண்டம் வட்டாட்சியர் குமரய்யா, இதுகுறித்து ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜமாணிக்கத்தை சனிக்கிழமை இரவு கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

More from the section

நிரந்தர வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.16.55 லட்சம் பறிமுதல்
மது விற்பனை: பெண் உள்பட  5 பேர் கைது


தொகுதிக்கு 100 பேர் போட்டி: பிரசாரம் செய்த விவசாயிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை

மக்களவைத் தேர்தல்: வாகனத் தணிக்கையை ஆய்வு செய்த செலவினப் பார்வையாளர்