24 மார்ச் 2019

சாலை பாதுகாப்பு வாரவிழா

DIN | Published: 10th February 2019 03:55 AM

அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் அருகே, லயன்ஸ் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி., மோகன்தாஸ் மேற்பார்வையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவுக்கு திருமானூர் காவல் நிலைய ஆய்வாளர் அன்புச்செல்வன் தலைமை வகித்து, வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரங்கள் வழங்கினார். 
மேலும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், வாகனங்களில் செல்லும்போது, செல்பேசியில் பேசுவதைத் தவிர்ப்பது, சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் வாகன ஓட்டுகளுக்கு எடுத்துக்கூறினார். லயன்ஸ் சங்கத் தலைவர் நிஜாமுகைதீன், குழந்தைகள் பாதுகாப்பு தலைவர் பாஸ்கர், லயன்ஸ் சங்கப் பொருளாளர் ஸ்ரீதர், சமூக ஆர்வலர்கள் திருநாவுக்கரசு, கருப்பையன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
விக்கிரமங்கலம் அரசுப் பள்ளியில் விழிப்புணர்வு:
விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் தலைமை வகித்தார். 
நிகழ்ச்சியில், காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் பங்கேற்று, மாணவர்கள் பேருந்து பயணத்தின் போது படியில் நின்ற படி பயணம் செய்வதால் உண்டான உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டி பேசினார். உரிய வயது வராமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறினார். பின்னர் அவர் துளிர் அறிவியல் திறனறிதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். பள்ளியின் முதுகலை ஆசிரியர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.
 

More from the section

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சத்தில் கல்விச் சீர்
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக அலைவீசுகிறது: தொல்.திருமாவளவன்
அரியலூரில் ரூ.2 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு