வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

அரியலூர் தூய லூர்து அன்னை தேர் பவனி

DIN | Published: 11th February 2019 10:29 AM

அரியலூர் நகரில் உள்ள தூய லூர்து அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவின் பெரிய அலங்காரத் தேர்பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்காரத் தேர் பவனி  ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. குடந்தை மறை மாவட்ட ஆயர் ஏ.அமிர்தசாமி, புனிதம் செய்து தேர் பவனியைத் தொடங்கி வைத்தார்.
புனித லூர்து அன்னை பெரிய தேரில் எழுந்தருளி, 
முக்கிய வீதிகளில் வலம் வந்து, பின்னர் பேராலய முகப்பை அடைந்தது. தேர் பவனியைக் காண திரளான பொதுமக்கள் வந்திருந்தனர். திங்கள்கிழமை (பிப்.11) மாலை சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 

More from the section

ஜயங்கொண்டம் அருகே தேர்தல் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக்கொடி
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட எஸ்.பி., ஆய்வு
பங்குனி உத்திர தேரோட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம்..
ஜயங்கொண்டம் ரயில் பாதை திட்டத்துக்கு உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு
அரியலூர் ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு