சனிக்கிழமை 23 மார்ச் 2019

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

DIN | Published: 11th February 2019 10:29 AM

சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் செந்துறையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
செந்துறை ஏந்தல் ஏரி அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்துக்கு, உதவி கோட்டப் பொறியாளர் செந்தில் தலைமை வகித்தார். 
பிரசாரத்தின்போது, வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்து துண்டுப்பிரசுரங்களை வழங்கினார். அதில் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிதல், சாலையில் உள்ள எச்சரிக்கை குறியீடுகளுக்கு மதிப்பு கொடுத்து பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்டுவது உள்பட 53 எச்சரிக்கை வாசகங்கள் இருந்தன. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், வாகன ஓட்டிகள் ஆகியோரிடம் சாலை பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தனர்.
 

More from the section

சுமை ஆட்டோ மோதி காயமடைந்த  தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்தவர் சாவு
இளைஞருக்கு அரிவாள் வெட்டு


வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் கவனத்துக்கு...

அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி