வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

உடையார்பாளையம் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை

DIN | Published: 17th February 2019 03:26 AM


அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கிராம பொதுமக்கள் சார்பில் கல்வி சீர்வரிசை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளிக்குத் தேவையான நாற்காலி, குடம், மேஜை உள்ளிட்ட ரூ15,000 மதிப்பிலான பொருள்களை கிராம பொதுமக்கள் மேளதாளத்துடன் சீர் வரிசையாக கொண்டு வந்து வழங்கினர்.
தொடர்ந்து, பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் அசோகன் தலைமை வகித்தார். 
பள்ளித் தலைமையாசிரியர்  ஹரிசுந்தர்ராஜ்,மேலாண்மைக் குழுத் தலைவர் கவிதா முன்னிலை வகித்தனர். முன்னதாக உதவி ஆசிரியர் வானதி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

More from the section

நிரந்தர வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.16.55 லட்சம் பறிமுதல்
மது விற்பனை: பெண் உள்பட  5 பேர் கைது


தொகுதிக்கு 100 பேர் போட்டி: பிரசாரம் செய்த விவசாயிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை

மக்களவைத் தேர்தல்: வாகனத் தணிக்கையை ஆய்வு செய்த செலவினப் பார்வையாளர்