24 மார்ச் 2019

சிவச்சந்திரன் படத்துக்கு பள்ளி மாணவர்கள் மரியாதை

DIN | Published: 17th February 2019 03:25 AM


தீவிரவாதத்  தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 
சிஆர்பிஃஎப் வீரர் சிவச்சந்திரன் படத்துக்கு சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்  அஞ்சலி செலுத்தினர்.
வீரர் சிவச்சந்திரன் எம்ஏ., முடித்துவிட்டு,  இந்திர காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் படித்து வந்தார்.
இதற்காக 2018, ஆகஸ்ட் மாதம் விடுப்பு எடுத்து வந்த சிவச்சந்திரன்  தனது கிராமத்துக்கு அருகேயுள்ள சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
தற்போது, ரவிச்சந்திரன் இறந்த தகவலறிந்து சனிக்கிழமை அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் மாணவர்கள் அவரது இல்லத்துக்கு வந்து படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திச்சென்றனர்.

More from the section

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சத்தில் கல்விச் சீர்
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக அலைவீசுகிறது: தொல்.திருமாவளவன்
அரியலூரில் ரூ.2 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு