சனிக்கிழமை 23 மார்ச் 2019

கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீசுவரர் வீதியுலா

DIN | Published: 19th February 2019 09:51 AM

அரியலூர் மாவட்டம், கங்கைகெண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீசுவரர் திருக்கோயில்  மாசிமக பிரம்மோத்ஸவத்தையொட்டி திங்கள்கிழமை பிரகதீசுவரர் வீதியுலா நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 10 ஆம் தேதி பிரம்மோத்ஸவ விழா தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் யாக பூஜைகள், இரவில் பாராயணம் நடைபெற்றன.
பிப்.16,17 ஆம் தேதிகளில் யாக பூஜை, திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான திருத்தேர் வீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது. ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் கோமகன், அன்னாபிஷேக கமிட்டி நிர்வாகி ஜடாதரன் மற்றும் பொதுமக்கள்  என ஏராளமானோர் திருத்தேரை வடம்பிடித்துஇழுத்தனர். 
செவ்வாய்க்கிழமை மாசிமக சொர்ணவத்ஸவ தீர்த்தவாரி, கலசங்கள் அபிஷேகமும், இரவு கொடியிறக்கமும் நடைபெறும். புதன்கிழமை அம்பாள், சண்டிகேசுவரர் உற்ஸவம், யதாஸ்தான பிரவேசம் நடைபெற உள்ளது.கொடிமரம் இல்லாததால் கடந்த 150 ஆண்டுகளாக  பிரம்மோத்ஸவம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு கொடிமரம் அமைக்கப்பட்டு பிரம்மோத்ஸவம் நடத்தப்பட்ட நிலையில், 2 ஆவது ஆண்டாக நிகழாண்டிலும் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை  சோழீசுவரர்  ஸ்ரீபாத வழிபாடு குழுமம், காஞ்சிகாமகோடி அன்னாபிஷேக கமிட்டி, மற்றும் கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுமம், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
 

More from the section

ஜயங்கொண்டம் அருகே தேர்தல் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக்கொடி
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட எஸ்.பி., ஆய்வு
பங்குனி உத்திர தேரோட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம்..
ஜயங்கொண்டம் ரயில் பாதை திட்டத்துக்கு உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு
அரியலூர் ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு