சனிக்கிழமை 23 மார்ச் 2019

சிஆர்பிஃஎப் வீரர் சிவசந்திரன் குடும்பத்துக்கு நடிகர் ரோபோ சங்கர் நிதியுதவி

DIN | Published: 19th February 2019 09:51 AM

பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகிலுள்ள கார்குடியைச் சேர்ந்த சிஆர்பிஃஎப் வீரர் சிவசந்திரன் குடும்பத்துக்கு நடிகர் ரோபோ சங்கர் ரூ.1 லட்சம் நிதியுதவி  வழங்கினார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 
உயிரிழந்த சிஆர்பிஃஎப் வீரர்களில், தா.பழூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரனும் ஒருவர்.
கடந்த 16 ஆம் தேதி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து  கார்குடி கிராமத்துக்கு திங்கள்கிழமை வந்த நடிகர் ரோபோ சங்கர், சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கினார். இதுபோல, சின்னத்திரை நடிகை அறந்தாங்கி நிஷாவும் சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

More from the section

ஜயங்கொண்டம் அருகே தேர்தல் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக்கொடி
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட எஸ்.பி., ஆய்வு
பங்குனி உத்திர தேரோட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம்..
ஜயங்கொண்டம் ரயில் பாதை திட்டத்துக்கு உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு
அரியலூர் ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு