சனிக்கிழமை 23 மார்ச் 2019

எம்ஆர் கல்லூரியில் கருத்தரங்கு

DIN | Published: 22nd February 2019 09:31 AM

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் தனிமனிதனின் ஒழுக்கமே சமுதாயத்தின் ஒழுக்கம் எனும் தலைப்பில் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர். ரகுநாதன் தலைமை வகித்தார். ஆலோசகர் முனைவர் தங்க. பிச்சையப்பா முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் எ. சந்திரசேகரன், பாஸ்கர், கலையரசி, முத்தமிழ்செல்வன், சுகன்யா, ரேவதி, சத்தியா, வெற்றிசெல்வி, பிரேம், சதீஷ், உஷாராணி ஆகியோர் பங்கேற்று பேசுகையில், ஒரு தனிமனிதனின் செயல்கள் அவனுக்கு மட்டுமாய் இருப்பதில்லை. அவனுடைய ஒழுக்கமும், ஒழுக்கக் கேடும்  சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றனர்.
பேராசிரியை ந. கலையரசி வரவேற்றார். பேராசிரியை உஷாராணி நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை பேராசிரியர் சந்திரசேகரன் தலைமையில் பேராசிரியர்கள் செய்தனர்.
 

More from the section

சுமை ஆட்டோ மோதி காயமடைந்த  தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்தவர் சாவு
இளைஞருக்கு அரிவாள் வெட்டு


வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் கவனத்துக்கு...

அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி