24 மார்ச் 2019

கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தள்ளிவைப்பு

DIN | Published: 23rd February 2019 08:24 AM

கால்நடைப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு அரியலூர் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 22 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு, அழைப்புக் கடிதங்களும் அனுப்பப்பட்டிருந்தன.
தற்போது நிர்வாக காரணம் கருதி மேற்காணும் நேர்காணல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது, நேர்காணல், பணி நியமனம் வழங்குவது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

More from the section

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சத்தில் கல்விச் சீர்
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக அலைவீசுகிறது: தொல்.திருமாவளவன்
அரியலூரில் ரூ.2 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு