திங்கள்கிழமை 25 மார்ச் 2019

குறிச்சிகுளம் திரெளபதியம்மன் கோயில் தேரோட்டம்

DIN | Published: 23rd February 2019 08:26 AM

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குறிச்சிகுளம் கிராமத்திலுள்ள திரௌபதியம்மன்  கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இக் கோயிலில் கடந்த 5 தேதி காப்பு கட்டுதலுடன் தேர் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மக்கள் நலமுடன் வாழ  மகாபாரதம் பாடப்பட்டது. முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாலை  4 மணிக்கு திரெளபதியம்மன், காளியம்மன்  தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த தேர் தீமிதி திடல் அருகே வந்தவுடன் காப்பு  கட்டிய பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் தேரோடும் வீதிகள் வழியாக தேர் இழுக்கப்பட்டு இரவு 8 மணியளவில் நிலைக்கு வந்தது. பொதுமக்கள் மாவிளக்கு வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
குறிச்சிகுளம், அசாவீரன்குடிக்காடு, ஆர்எஸ் மாத்தூர், படைவெட்டி குடிக்காடு, நயினார்குடிக்காடு, கஞ்சமலைப்பட்டி, மாறாக்குறிச்சி ஆகிய ஏழு கிராம மக்கள் இணைந்து நடத்தும் திருவிழா என்பதால் சுமார் 7ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

More from the section

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சத்தில் கல்விச் சீர்
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக அலைவீசுகிறது: தொல்.திருமாவளவன்
அரியலூரில் ரூ.2 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு