24 மார்ச் 2019

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN | Published: 23rd February 2019 08:25 AM

அரியலூர் மாவட்டம் மேலகருப்பூர் அடுத்த கரு-சேனாபதி கிராமத்திலுள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்டத் திட்ட  உதவி அலுவலர் ராஜா தொடக்கி வைத்து பார்வையிட்டார். ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் கும்பகோணம் சேவா சங்க நிர்வாகி சதீஷ்,ஆசிரியர் பயிற்றுநர் மோகன் மற்றும் அப்பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் ஹைட்ராஜன் எரிபொருள்,ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை,எண்ணியல் அடிப்படை கொள்கை, தொலைபேசி பாதிப்புகள், கபடி விளையாட்டு, நில நடுக்க எச்சரிக்கை மணி ஆகியவற்றை மாணவிகள் செய்து காட்சிக்காக வைத்திருந்தனர். 
முன்னதாக அப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இடை நின்ற மாணவிகளை எவ்வாறு அழைத்து வந்து பள்ளியில் சேர்ப்பது,அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

More from the section

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சத்தில் கல்விச் சீர்
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக அலைவீசுகிறது: தொல்.திருமாவளவன்
அரியலூரில் ரூ.2 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு