24 மார்ச் 2019

பாளையபாடியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை

DIN | Published: 23rd February 2019 08:24 AM

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் பாளையபாடி கிராமத்தில் அன்னிமங்கலம், மஞ்சமேடு ஊராட்சிகளுக்கான அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கட்சியின் ஒன்றியச் செயலர் குமரவேல் தலைமை வகித்தார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் வடிவழகன், முன்னாள் தொகுதி செயலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் பேசுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வெற்றி நிச்சயிக்கப்பட்டதாகும். 
கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்று தமிழகத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி முதலிடத்தை பெற வேண்டும். இதற்காக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

More from the section

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சத்தில் கல்விச் சீர்
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக அலைவீசுகிறது: தொல்.திருமாவளவன்
அரியலூரில் ரூ.2 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு