செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின்: ஆர்.வைத்திலிங்கம்

DIN | Published: 21st January 2019 08:17 AM

இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின் என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம்.
 அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தேர்தல் ஆதாயத்துக்காக கொடநாடு விவகாரத்தை ஸ்டாலின் செய்து வருகிறார். அதிமுக அழிந்து விட்டது என எம்ஜிஆர் இறந்தபோதும், ஜெயலலிதா இறந்தபோதும் சொல்லிய திமுக, ஆட்சியைப் பிடிக்க பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் திமுகவை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். அதிமுகவில் குடும்ப அரசியல் இல்லை. ஆனால், திமுகவில் குடும்ப அரசியல் செய்வதை மக்கள் நன்கு அறிவர். ராகுல்காந்தி தான் பிரதமர் என சொன்ன ஸ்டாலின், தற்போது மம்தா நடத்திய கூட்டத்தில் தேர்தலுக்கு பிறகு தான் பிரதமர் யார் என சொல்ல முடியும் என்கிறார். எப்படியாவது ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டுமென நினைத்து இரண்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின்.
மேக்கேதாட்டு அணை திட்டத்தை எதிர்த்து அதிமுக தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து எதிர்ப்பை காண்பித்தும் வருகிறது என்றார் அவர்.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிதம்பரம் எம்பி., மா.சந்திரகாசி, ஜயங்கொண்டம் எம்எல்ஏ., ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், தலைமை கழக பேச்சாளர் அறிவழகன், ஒன்றிய செயலர் செல்வராஜ் ஆகியோர் பேசினர்.
 

More from the section


சிஆர்பிஃஎப் வீரர் சிவசந்திரன் குடும்பத்துக்கு நடிகர் ரோபோ சங்கர் நிதியுதவி


ஆண்டிமடம் சார் பதிவகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீசுவரர் வீதியுலா
நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்    
பேருந்து- பள்ளி வேன் மோதல்: 3 பேர் காயம்