செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

இளைஞரைத் தாக்கிய 3 பேர் கைது

DIN | Published: 21st January 2019 08:17 AM

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இளைஞரைத் தாக்கிய 3 பேர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிமடம் அருகேயுள்ள சாலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(27). கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த இவரை, முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்(29), பாலமுருகன், சின்னதுரை(51), சேட்டு (எ) சங்கர் (43) ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்து ராஜ்குமாரின் தந்தை குப்புசாமி அளித்த புகாரின் பேரில்  ஆண்டிமடம் போலீஸார் வழக்கு பதிந்து மணிகண்டன், சின்னதுரை, சங்கர் ஆகிய 3 பேரைக் கைது செய்து, தலைமறைவாக உள்ள பாலமுருகனைத் தேடி வருகின்றனர்.

More from the section


சிஆர்பிஃஎப் வீரர் சிவசந்திரன் குடும்பத்துக்கு நடிகர் ரோபோ சங்கர் நிதியுதவி


ஆண்டிமடம் சார் பதிவகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீசுவரர் வீதியுலா
நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்    
பேருந்து- பள்ளி வேன் மோதல்: 3 பேர் காயம்