சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

தா.பழூர் விசுவநாதர் கோயிலில் உழவாரப் பணி

DIN | Published: 21st January 2019 08:18 AM

அரியலூர் மாவட்டம் தா. பழூரில் உள்ள அருள்மிகு விசாலாட்சி சமேத விசுவநாதர் கோயிலில் உழவாரப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தா.பழூர் அருள்மிகு விசாலாட்சி சமேத விசுவநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆனதையடுத்து, தற்போது மீண்டும் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், தா.பழூர் சிவாலய நால்வர் 
வழிபாட்டுக் குழு மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தினர் இணைந்து விசுவநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். 
இதில் கோயிலைச் சுற்றி வளர்ந்து இருந்த செடி, கொடிகளை அகற்றியும், கோயில் விளக்குகள் மற்றும் தளவாட சாமான்களைத் தூய்மையும் செய்தனர். 
 

More from the section

குறிச்சிகுளம் திரெளபதியம்மன் கோயில் தேரோட்டம்
பள்ளியில் அறிவியல் கண்காட்சி
பாளையபாடியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை
நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தள்ளிவைப்பு