செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

க.பொய்யூர் அரசுப் பள்ளியில் பொங்கல் விழாவை கொண்டாடிய மக்கள்

DIN | Published: 22nd January 2019 09:48 AM

அரியலூர் மாவட்டம், க.பொய்யூர்ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பொது மக்கள் சார்பில் 11 ஆம் ஆண்டு பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில்  பங்கேற்ற பொதுமக்கள் புதுப்பானையில்,பொங்கல் வைத்து, பின்னர் மஞ்சள்,வாழைப்பழம், செங்கரும்பு வைத்து சூரியனுக்கு வைத்துப் படைத்தனர். இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள்,மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் பொங்கலை வழங்கி,தாங்களும் சாப்பிட்டுமகிழ்ந்தனர்.விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு   அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் அரிசெல்வராஜ் பரிசுகளை வழங்கிப் பேசினார். 
அவர் தனது உரையில், இதுபோன்று  மற்ற கிராமங்களிலுள்ள அரசுப் பள்ளிகளிலும் பொதுமக்கள் முன்னின்று பொங்கல் விழாவை நடத்த வேண்டும் என்றார். 
அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்மையாள்,ராமச்சந்திரன் மற்றும் க.பொய்யூர் கிராம மக்கள் பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.

More from the section


சிஆர்பிஃஎப் வீரர் சிவசந்திரன் குடும்பத்துக்கு நடிகர் ரோபோ சங்கர் நிதியுதவி


ஆண்டிமடம் சார் பதிவகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீசுவரர் வீதியுலா
நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்    
பேருந்து- பள்ளி வேன் மோதல்: 3 பேர் காயம்