21 ஏப்ரல் 2019

அரியலூர் ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

DIN | Published: 22nd March 2019 08:48 AM

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக மையம், ஊடக சான்றிதழ் வழங்கும் குழுவினர் அறை ஆகியவற்றை தேர்தல் செலவின பார்வையாளர் துர்காதத் வியாழக்கிழமை பார்வையிட்டு செய்தார்.
இந்த ஆய்வில் உடனிருந்த மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மு. விஜயலட்சுமி இதுகுறித்து தெரிவித்ததாவது:
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தகவல் கட்டுப்பாட்டு மையம், ஊடக சான்றிதழ் வழங்கும் மற்றும் ஊடக கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இ-பதிப்பு செய்தித்தாள்களில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும்  குழுவிடம் முன்சான்றிதழ் பெறவேண்டும். தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய நாள்  செய்தித்தாளில் வெளியிடப்படும் அரசியல் விளம்பரங்களுக்கும் முன்சான்றிதழ் பெறவேண்டும். தவறும்பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கீழ்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மையத்தில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.  மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை 04329-228605, 04329-228606, 04329-228607 என்ற எண்களில் பொதுமக்கள்  தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் உடனுக்கு டன் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகளின்  அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆய்வின்போது, வருமான வரித்துறை துணை இயக்குநர் கண்ணன், சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன், மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ஜெயஅருள்பதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

More from the section

பெரம்பலூர் அருகே  குடிநீர் கோரி மறியல் போராட்டம்
இரு தரப்பினரிடையே மோதல்: 7 பேர் கைது
கல்வியில் முன்னேறி வரும் பெரம்பலூர் மாவட்டம்
சர்ச்சைக்குரிய விடியோ வெளியிட்டதாக இரு இளைஞர்கள் கைது
பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்