21 ஏப்ரல் 2019

ஜயங்கொண்டம் ரயில் பாதை திட்டத்துக்கு உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு

DIN | Published: 22nd March 2019 08:49 AM

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துவேன் என்று உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக பென்ஷனர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.கூட்டத்துக்கு, அச்சங்கத் தலைவர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார். ராசமாணிக்கம் முன்னிலை வகித்தார். செயலர் ராமமூர்த்தி அறிக்கை வாசித்தார்.  
கூட்டத்தில், பொங்கல் கருணை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடைமையாற்ற வேண்டும். கும்பகோணம் - ஜயங்கொண்டம் - விருத்தாசலம், சிதம்பரம் - ஜயங்கொண்டம் - அரியலூர் ரயில் பாதையைக் கொண்டுவர பாடுபடுவேன்  என்ற உறுதியளிக்கும் வேட்பாளரை வெற்றியடையச் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொருளாளர் சுந்தரேசன், நிர்வாகிகள் ராமையன், அருமைநாதன், பாஷ்யம், கோவிந்தராசன், லூர்து, குருசாமி, கோவிந்தராசன், கலியபெருமாள் ஆகியோர் பங்கேற்றனற்.  துணைத் தலைவர் சோ. ராமசாமி வரவேற்றார். பூ. ராமசாமி நன்றி கூறினார்.

More from the section

பெரம்பலூர் அருகே  குடிநீர் கோரி மறியல் போராட்டம்
இரு தரப்பினரிடையே மோதல்: 7 பேர் கைது
கல்வியில் முன்னேறி வரும் பெரம்பலூர் மாவட்டம்
சர்ச்சைக்குரிய விடியோ வெளியிட்டதாக இரு இளைஞர்கள் கைது
பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்