21 ஏப்ரல் 2019

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட எஸ்.பி., ஆய்வு

DIN | Published: 22nd March 2019 08:49 AM

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
ஜயங்கொண்டம் - விருத்தாசலம் சாலையில் பெரிய ஆத்துக்குறிச்சி மற்றும் கும்பகோணம் - சென்னை சாலையில் காடுவெட்டியிலும் புதிதாக சோதனைச்சாவடிகளை திறந்து வைத்த பின்னர் அவர் மேலும் கூறியது:   வாக்காளர்கள் அனைவரும் சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் அமைதியான முறையில் வாக்களிக்க பாதுகாப்பை பலப்படுத்திவுள்ளோம் என்றார்.
ஜயங்கொண்டம் வட்டார காவல் துணை கண்காணிப்பாளர் கென்னடி, காவல் நிலைய ஆய்வாளர்கள் மீன்சுருட்டி மலைச்சாமி, ஜயங்கொண்டம் ராஜ்மோகன், ஆண்டிமடம் ஜெகதீசன், தா.பழூர் ரஞ்சனா மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
 

More from the section

பெரம்பலூர் அருகே  குடிநீர் கோரி மறியல் போராட்டம்
இரு தரப்பினரிடையே மோதல்: 7 பேர் கைது
கல்வியில் முன்னேறி வரும் பெரம்பலூர் மாவட்டம்
சர்ச்சைக்குரிய விடியோ வெளியிட்டதாக இரு இளைஞர்கள் கைது
பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்