21 ஏப்ரல் 2019

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு

DIN | Published: 24th March 2019 03:16 AM


அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருமானூர் அருகேயுள்ள குலமாணிக்கம்,கீழத்தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (52). விவசாய கூலித்தொழிலாளி. வெள்ளிக்கிழமை நள்ளிரவு குலமாணிக்கத்தில் இருந்து இலந்தைக் கூடம் பிரிவு பாதையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இவர், மீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரான்சிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வெங்கனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

More from the section

பெரம்பலூர் அருகே  குடிநீர் கோரி மறியல் போராட்டம்
இரு தரப்பினரிடையே மோதல்: 7 பேர் கைது
கல்வியில் முன்னேறி வரும் பெரம்பலூர் மாவட்டம்
சர்ச்சைக்குரிய விடியோ வெளியிட்டதாக இரு இளைஞர்கள் கைது
பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்