புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சத்தில் கல்விச் சீர்

DIN | Published: 24th March 2019 03:16 AM


 அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கட்டையன்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை, கல்விச்சீர் வழங்குதல், பள்ளி ஆண்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.
கிராம பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு தேவையான ரூ. 1 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்களை மேளதாளத்துடன் கொண்டு வந்து தலைமை ஆசிரியையிடம் வழங்கினர். தொடர்ந்து பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கையும், ஆண்டுவிழாவையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், செந்துறை வட்டார வளமைய மேற்பார்வையாளர் குணசேகரன், பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
 

More from the section

தா. பழூரில் கேந்தி பூக்களின் விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
கல்லங்குறிச்சி பெருமாள் கோயிலில் ஏகாந்த சேவை
பொன்பரப்பி சம்பவம்: குண்டர் சட்டத்தில் நடவடிக்கை தேவை
அரியலூர், ஜயங்கொண்டத்தில்  ஏப். 26-இல் விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்
வன்முறையில் காயமடைந்தோருக்கு ஆறுதல்