21 ஏப்ரல் 2019

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக அலைவீசுகிறது: தொல்.திருமாவளவன்

DIN | Published: 24th March 2019 03:16 AM


இந்தத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக  அலைவீசுகிறது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள் சந்திக்கும் கூட்டம் அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்தில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளருமான தொல். திருமாவளவன் பொறுப்பாளர்களை சந்தித்து சால்வை அணிவித்தார். கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:  
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். காலம் கடந்து சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் பானை சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதால், ஜனநாயக 
துஷ்பிரயோகம் நடக்க வாய்ப்பு உள்ளது. தேர்தல் ஆணையம் மிகுந்த எச்சரிக்கையோடு விழிப்புணர்வோடு தேர்தலை நடத்த வேண்டும்.
சிதம்பரம் தொகுதியில் நான் ஐந்தாவது முறையாக போட்டியிடுகின்றேன். வரும் மக்களவைத் தேர்தலில் கொள்கை கூட்டணியின் வேட்பாளராக நான் சிதம்பரம் தொகுதியில் களம் கண்டுள்ளேன் என்றார்.
மோடி ஆட்சியில் விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் மோடிக்கு எதிராக வெளிப்படையாக அலை வீசுகிறது என்றார்.

More from the section

பெரம்பலூர் அருகே  குடிநீர் கோரி மறியல் போராட்டம்
இரு தரப்பினரிடையே மோதல்: 7 பேர் கைது
கல்வியில் முன்னேறி வரும் பெரம்பலூர் மாவட்டம்
சர்ச்சைக்குரிய விடியோ வெளியிட்டதாக இரு இளைஞர்கள் கைது
பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்