21 ஏப்ரல் 2019

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

DIN | Published: 24th March 2019 03:17 AM


அரியலூர், ஜயங்கொண்டம் ஆகிய இரு கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி சனிக்கிழமை அனுப்பி வைத்தார். 
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட தற்செயல் தேர்ந்தெடுக்கும் முறை செயல்விளக்கம் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.விஜயலட்சுமி தலைûயில் சனிக்கிழமை நடைபெற்றது. 
பின்னர், இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகள் அந்தந்த கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அனைத்து கட்சிகளின் பிரதிதிகள் முன்னிலையில் அனுப்பிவைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கா.பொற்கொடி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பொறுப்பு அலுவலர் ஜெ.பாலாஜி, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் நா.சத்தியநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெயஅருள்பதி, தேர்தல் தனி வட்டாட்சியர் சந்திரசேகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அரியலூர் ம.கதிரவன்,ஜயங்கொண்டம் கு.குமரய்யா, ஆண்டிமடம் மு.ராஜமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

More from the section

பெரம்பலூர் அருகே  குடிநீர் கோரி மறியல் போராட்டம்
இரு தரப்பினரிடையே மோதல்: 7 பேர் கைது
கல்வியில் முன்னேறி வரும் பெரம்பலூர் மாவட்டம்
சர்ச்சைக்குரிய விடியோ வெளியிட்டதாக இரு இளைஞர்கள் கைது
பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்