திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

அதிகாரியை தாக்கி செயின் பறிப்பு

DIN | Published: 11th September 2018 08:45 AM

கரூரில் பெட்ரோல் சேமிப்பு கிடங்கு அதிகாரியை தாக்கி இரண்டரை பவுன் தங்கச் செயின், மடிக்கணினி பறிக்கப்பட்டது. 
வெண்ணைமலையைச் சேர்ந்தவர் மனோகரன்)51), கரூர் ஆத்தூரில் உள்ள பெட்ரோல் சேமிப்புக் கிடங்கில் முதன்மை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை இரவு பணி முடிந்து காரில் பெரிச்சிபாளையம் பகுதியில் சென்றார். இவரது காரை நிறுத்திய மர்ம நபர்கள் இருவர் கார் கண்ணாடியை உடைத்தனர். பின்னர் மனோகரன் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் செயின், மடிக்கணினி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.  இதுகுறித்த புகாரின்பேரில் வெங்கேமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

More from the section


அரசுப் பேருந்து - பைக் மோதல்: இளைஞர் சாவு

மனநலம் குன்றிய சிறுமி கர்ப்பம்: முதியவர் மீது போக்ஸோ வழக்கு
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி:  கரூர் பள்ளி மாணவி சிறப்பிடம்
அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள்: 64 ஆசிரியர்கள் நியமனம்
முதல்வர் கோப்பைக்கான  மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்: ஜன. 29-இல் தொடக்கம்