20 ஜனவரி 2019

அரசு அனைத்து மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 11th September 2018 08:44 AM

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து மருந்தாளுனர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் அறிவுச்செல்வி, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கே.இளங்கோ கோரிக்கையை விளக்கி பேசினார். காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புதல், மருத்துவமனையில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மருந்தாளுநர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாக, துணைத் தலைவர் ஆர்.பிரேம்குமார் வரவேற்றார். முடிவில், பொருளாளர் வி.ஞானபாரதி நன்றி கூறினார்.

More from the section

சாலை மேம்பாட்டுப் பணிக்கான பூமிபூஜை: நெரூரில் தொகுப்பு வீடுகள் சீரமைப்புக்கு நிதியுதவி
சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
டிராக்டர் உரசியதில் பைக் கவிழ்ந்து 3 வயது குழந்தை சாவு
வெண்ணைமலை பாலசுப்ரமணியருக்கு திருக்கல்யாணம்
கார் மோதி இளம்பெண் சாவு