சனிக்கிழமை 23 மார்ச் 2019

சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 22nd February 2019 09:38 AM

கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலையில் 99 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கோவை பிரிக்கால் ஆலையில் 297 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 8 லட்சம் பேர் வேலையிழந்ததைக் கண்டித்தும் கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ்அலுவலகம் முன் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் சி. முருகேசன், நிர்வாகிகள் கந்தசாமி, ராஜாமுகமது, மதியழகன் உள்ளிட்டோர் பேசினர். இதில் தொழிற்சங்கத்தினர் திரளாக பங்கேற்றனர்.
 

More from the section

தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை: நண்பர் கைது
தேசிய உழவர் உழைப்பாளர் கழக வேட்பாளருக்கு டிபன் பாக்ஸ் சின்னம்
பெண்களை சுயமாக சிந்திப்பதற்கு அனுமதிப்பதில்லை: பேராசிரியர் பா. ராஜ்குமார்
காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
செல்வமகள் திட்டத்தில்  இதுவரை ரூ.66.33 கோடி சேமிப்பு