21 ஏப்ரல் 2019

அனுமதியின்றி மது விற்றவர் கைது

DIN | Published: 19th March 2019 09:02 AM

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பெட்டிக்கடையில் மது விற்றவரைப் போலீஸார் கைது செய்தனர்.
தோகைமலை அருகே ஆர்.டி. மலை ஊராட்சி நாவல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (35). இவர் காவல்காரன்பட்டியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நாகராஜ் தனது பெட்டிக்கடையில் அரசு மதுபானங்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தோகைமலை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. 
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தபோது, அரசு அனுமதியின்றி மதுபானங்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மது பானங்களைப் பறிமுதல் செய்த போலீஸார் நாகராஜையும் கைது செய்தனர்.

More from the section

ஈஸ்டர் பண்டிகை ரூ.600 ஆக உயர்ந்த மல்லிகைப்பூ விலை
கரூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் போதிய பாதுகாப்பு இல்லை
இடைத்தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் கள் இயக்கம் போட்டியிட முடிவு
கரூர் அரசுக் கல்லூரியில் நாளை முதல் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்