21 ஏப்ரல் 2019

கரூரில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகம்: இழப்பீடாக ரூ.4.61 கோடி வழங்கப்பட்டது

DIN | Published: 19th March 2019 09:01 AM

கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு  சொந்தமான இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டியதுக்கு  நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.4 கோடியே 61 லட்சத்து 56 ஆயிர த்து 783 வழங்க பட்டது. 
சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: கரூர் அருகே கல்யாண வெங்கடரமணசுவாமி கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம்  உள்ளது.  அதில் தாந்தோணி கிராமத்தில் கோயிலுக்கு சொந்தமான 16 ஹெக்டேர் புன்செய் நிலம் இருந்தது. அந்த நிலத்தை எவ்வித அனுமதியுமின்றி நில ஆர்ஜித சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகம் அமைப்பதற்கு அரசு கையகப்படுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது.  இதையடுத்து மாவட்ட நிர்வாகம் 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனுமதியின்றி கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான சந்தை மதிப்பிலான இழப்பீட்டை கோயிலுக்கு வழங்கவில்லை. இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியருக்கும், அரசுக்கும் பல முறை மனு செய்தும் எவ்வித பயனும் இல்லை. கோயில் நிலத்தில் விதிமீறி கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு இன்றைய சந்தை மதிப்பிற்கானத் தொகையை கோயில் நிர்வாகத்திடம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள கோயில் இடத்திற்கு உரிய விலை கொடுக்க வேண்டும், அதுவும் தற்போது உள்ள சந்தை மதிப்பை கணக்கில் கொண்டு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில்,  இந்த உத்தரவை நடைமுறைபடுத்த வில்லை என கரூர் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஆர்.தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது  அரசு தரப்பு வழக்குரைஞர் நீதிமன்ற உத்தரவுப்படி,  கரூர்  கல்யாண வெங்கட ரமண சுவாமி கோயிலுக்கு மாவட்ட நிர்வாகம்   ரூ.4 கோடியே 61 லட்சத்து 56 ஆயிரத்து 783 ரூபாய் வழங்கியதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு  வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
 

More from the section

ஈஸ்டர் பண்டிகை ரூ.600 ஆக உயர்ந்த மல்லிகைப்பூ விலை
கரூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் போதிய பாதுகாப்பு இல்லை
இடைத்தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் கள் இயக்கம் போட்டியிட முடிவு
கரூர் அரசுக் கல்லூரியில் நாளை முதல் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்