21 ஏப்ரல் 2019

கரூர்: காங்கிரஸில் இணைந்த தமாகாவினர்

DIN | Published: 19th March 2019 09:01 AM

கரூரில் தமாகா கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனர்.
கரூர் மாவட்டம் மூக்கணாங்குறிச்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சிவசாமி தலைமையில் தமாகா கட்சியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, மாவட்டத் தலைவர் சின்னசாமி ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். அப்போது அவர்கள் கூறியது: 
தமாகா தலைவர் ஜிகே.வாசன் எப்போது தேர்தல் வந்தாலும்,  மதச்சார்பற்ற கூட்டணியில் தான் இருப்பேன் எனக்கூறிவிட்டு தற்போது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்திருப்பது எங்களைப் போன்ற தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் தாயக் கழகமான காங்கிரஸில் இணைகிறோம் என்றனர். 
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

More from the section

ஈஸ்டர் பண்டிகை ரூ.600 ஆக உயர்ந்த மல்லிகைப்பூ விலை
கரூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் போதிய பாதுகாப்பு இல்லை
இடைத்தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் கள் இயக்கம் போட்டியிட முடிவு
கரூர் அரசுக் கல்லூரியில் நாளை முதல் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்