வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

DIN | Published: 11th September 2018 08:51 AM

மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு விடுதி மாணவிகள் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனர்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான இளையோர் தடகளப் போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்றனர். அதேபோல, மூத்தோர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், பரிசுத் தொகையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும் பெற்றனர். 
இதுதவிர, ஆந்திரா மாநிலம் குண்டூரில் வருகிற சனி(செப்.15), ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.16) நடைபெற உள்ள தென்னிந்திய அளவிளான தடகளப் போட்டிகளில், தமிழக அணி சார்பில் மாணவிகள் வி.பிரியதர்ஷினி, எம்.சுபாஷினி, ஆர்.சங்கீதா, ஆர்.கிருத்திகா, கே.பவானி, என்.நாகபிரியா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.  மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்த மாணவிகளை, ஆட்சியர் வே.சாந்தா பாராட்டினார்.  
 

More from the section

தேர்வு முகாமில் பங்கேற்க படித்த இளைஞர்களுக்கு அழைப்பு
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் விருதுகள்


குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

"மாட்டுவண்டிகளுக்கு தனி மணல் குவாரி  வேண்டும்'