திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

சிறுமியைத் திட்டிய 3 பேர் மீது வழக்கு

DIN | Published: 12th September 2018 07:42 AM

பெரம்பலூர் அருகே சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டி, கேலி செய்த 3 இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 9 ஆம் தேதி அங்குள்ள சந்தைக்குச் சென்றாராம். 
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (19), சங்கர் (18), பிரதீப் (19) ஆகியோர், அந்த சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டி கேலி செய்தனராம். 
இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவாகிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

More from the section

இரு தரப்பினரிடையே மோதல்: 13 பேர் கைது
கொடநாடு சம்பவத்தில் முதல்வருக்கு தொடர்பில்லை : ஆர். வைத்திலிங்கம்
பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிலரங்கம்
வகுப்பை மாற்றக்கோரி காத்திருப்புப் போராட்டம்
வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் குறித்த ஆலோசனை