புதன்கிழமை 23 ஜனவரி 2019

தவ்ஹீத் ஜமா அத் கிளைக் கூட்டம்

DIN | Published: 11th September 2018 08:47 AM

புதுகை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை பொதுக்குழு கூட்டம் பள்ளிவாசலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் முபாரக் அலி மற்றும் துணை செயலாளர் ரபீக் ராஜா தலைமை வகித்தனர். 
புதிய நிர்வாகிகளாக தலைவர் சபிபுல்லா, செயலாளர் முகமது யூசுப் ஆகிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
கூட்டத்தில், முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து காலடிப்பட்டி சத்திரம் வரை தார்ச்சாலை போடாமல் பணிகள் கிடப்பில் உள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
முக்கண்ணாமலைப்பட்டியில் அரசு உயர்நிலைபள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. ஆனால் இட வசதி இல்லாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். 
ஆகவே இதற்கு சம்மந்தபட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை   எடுத்து புதிய  வகுப்பறை கட்டடம் அமைத்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 

More from the section

பயிர்க் காப்பீடு: நாகுடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மாணக்கர்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்
"போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள பாடங்களை புரிந்து படித்தல் அவசியம்'
தைப்பூசம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, தீர்த்தவாரி
நிவாரணம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்னா