செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

DIN | Published: 11th September 2018 08:47 AM

திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொன்னமராவதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி தலைமைவகித்தார். நகரத் தலைவர் எம். சேது மலையாண்டி வரவேற்றார். 
மாவட்டச் செயலாளர் ஜெயம் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்டத் தலைவர் என்.சொக்கலிங்கம், மாநில துணை தலைவர் எம்என்.ராஜா, மாநில நெசவாளர் அணி தலைவர் பாலமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.குமரன், திருமயம் ஒன்றியத் தலைர் ஏஎல்.லோகநாதன், நிர்வாகிகள் பி.வடமலை, கே.செல்வக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். ஒன்றியத் தலைவர் என்.சேது நன்றி கூறினார்.

More from the section

அரிமளம் சிவகமலம் மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா
தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி
ஆலவயலில் வீணாகும் காவிரி குடிநீர்
நாளை திறன் மேம்பாட்டுப் பயிற்சி
விஜயரகுநாதபுரத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்