24 பிப்ரவரி 2019

விதைகளால் செய்த கொழுக்கட்டை விநாயகர் வழிபாடு

DIN | Published: 11th September 2018 08:49 AM

ஜயங்கொண்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விதைகளால் கொழுக்கட்டை தயாரித்து அதனை விநாயகர் சிலையாக வடிவமைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் கடைவீதியில் வசித்து வருபவர் ராஜா மனைவி பிரியா(45). இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விதவிதமான சிலைகளை வடிவமைத்து வழிபட்டு வருகின்றார். பத்தாவது ஆண்டாக தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலவித மரம், செடி, கொடிகளின் விதைகளைக் கொண்டு 1,008 கொழுக்கட்டை தயார் செய்து, அதனை விநாயகர் சிலையாக்கி வழிபாடு நடத்தி வருகின்றார். இதனை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
 

More from the section

பரியேறும் பெருமாள் படத்துக்கு விருது வழங்கல்
கவனமாகப் படித்தால் போதும், சிரமப்பட வேண்டியதில்லை
கட்டுமானத் தொழில்நுட்பக் கருத்தரங்கம்
கந்தர்வகோட்டையில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்
டிஎன்பிஎஸ்சி தேர்வு:  222 பேர் எழுதினர்