திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

"அக்னி குஞ்சுகள்' கவிதை முழக்கம்

DIN | Published: 12th September 2018 07:45 AM

பாரதியின் நினைவுநாளை முன்னிட்டு அக்னி குஞ்சுகள் கவிதை முழக்கம் நிகழ்ச்சி  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாரதி முற்றம் சார்பில் மேலப்பட்டு ஜீவா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாரதி முற்றம் நிறுவனரும், கலை இலக்கிய பெருமன்றத்தின் புதுகை மாவட்டச் செயலாளருமான கவிஞர் க.அஜாய்குமார் கோஷ் தலைமை வகித்தார்.
கவிஞர் மோகன்ராஜ், தமிழ்குமரன் உள்ளிட்டோர் முன்னிலைவகித்தனர். அறந்தாங்கி பகுதியில் உள்ள பள்ளிகளில் இருந்து பாரதி கவிதை வரிகளில்  தலைப்பும், நீர், நிலம், காற்று, பசுமை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை உள்ளடக்கும் விதமாக கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. நிறைவில், சிறப்பிடம் பெற்ற அரசர்குளம், சுப்பிரமணியபுரம், அறந்தாங்கி டைமண்ட் பள்ளி, திட்டக்குடி, சிங்கவணம், ஆவுடையார்கோவில், ஆவணத்தான்கோட்டை , உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. அறந்தாங்கி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம், கவிஞர் புத்திரசிகாமணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினர். முன்னதாக, நெய்தல் கவிஞர் மணியன் வரவேற்றார்.  நிறைவாக அஞ்சல் வீரையா நன்றி கூறினார். 
மகாகவி பாரதியார் படத்துக்கு மரியாதை: பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக். பள்ளியில் மகாகவி பாரதியாரின் 97 ஆவது நினைவுநாளையொட்டி செவ்வாய்க்கிழமை நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
பள்ளி முதல்வர் வே. முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாரதியார் திருவுருவப்படம் வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பாரதியாரின் தமிழ்ப்பணிகளை பள்ளியின் தனி அலுவலர் நெ.ராமச்சந்திரன் விளக்கிப் பேசினார். துணை முதல்வர்கள் வைதேகி, கலைமதி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தமிழ்த்துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

More from the section

அரிமளம் சிவகமலம் மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா
தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி
ஆலவயலில் வீணாகும் காவிரி குடிநீர்
நாளை திறன் மேம்பாட்டுப் பயிற்சி
விஜயரகுநாதபுரத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்