17 பிப்ரவரி 2019

அறந்தாங்கி அருகே கீழையூர் அரசுப் பள்ளியில்  ஜெனீவா ஒப்பந்த நாள் விழா

DIN | Published: 12th September 2018 07:46 AM

அறந்தாங்கி அருகே கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில்  ஜெனீவா ஒப்பந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர்  சு. மணிமுத்து தலைமையில் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் டெய்சி, எஸ். கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜீனியர் ரெட் கிராஸ் அமைப்பின் மாநில பயிற்சியாளர் மு. அக்பர் அலி யூசுப் கஸ்ஸாலி பேசியது:  சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் 1864 முதல் 1949 வரையிலான காலக்கட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு  உடன்படிக்கைகளின் தொகுப்பே ஆகும்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், பேச்சுவார்த்தைகள் மூலம்  அதன் முந்தைய மூன்று ஒப்பந்தங்களையும் இணைத்து இதில் சில கொள்கைகளையும் சேர்த்து 1949 ஆம் ஆண்டு  இறுதி ஒப்பந்தமாக  195 நாடுகள், போர்க் காலத்தில் கைதிகளையும், மக்களின் உயிர்களையும் பாதுகாப்பது சம்பந்தமாக செய்துகொண்டதே ஜெனிவா ஒப்பந்தமாகும் என்றார்.
பள்ளி ஆசிரியர்கள்  ஆ.நடராஜன், பி.சுசிலா, இரா.பாலசுப்பிரமணியன்  உள்ளிட்டோர் தன்னார்வத் தொண்டு பிறருக்கு உதவுதல் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது  ஆகிய தலைப்புகளில் பேசினர்.
ஜூனியர்களுக்கான பேச்சுப் போட்டியில்  மாணவி புவனேஷ்வரி, மற்றும் கிருஷ்ணன்  உள்ளிட்டோர் பரிசுகளை வென்றனர். முன்னதாக  ஆசிரியர் கோ.சரவணபெருமாள் வரவேற்றார். நிறைவில்  ஆசிரியர் நடராஜன்  நன்றி கூறினார்.

More from the section

இறவாப் புகழுடைய நல்நூல்களை மக்களிடம் கொண்டு செல்வது அவசியம்: ஸ்டாலின் குணசேகரன்
காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை
அரசுப் பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்கள் கல்விச்சீர்
நெடுவாசலில் மீண்டும் ஆர்ப்பாட்டம்
தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி