வியாழக்கிழமை 21 மார்ச் 2019

உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு

DIN | Published: 12th September 2018 07:48 AM

கந்தர்வகோட்டை அடுத்த மஞ்சப்பேட்டையில் ஸ்கார்ப் இந்தியா மனச்சிதைவு ஆராய்ச்சி மையம் மற்றும் புதுகை மாவட்ட கிராம தொலைதூர மனநல சேவை மையம் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
முகாமில், மனநல ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு மனநோய் பற்றியும், மனநல விழிப்புணர்வு பற்றியும், தற்கொலை தடுப்பு வழிகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். மேலும் மனநலம் மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அரசு மூலம் கிடைக்கும் உதவிகள் பற்றியும் எடுத்துக் கூறினார். முகாமில், மஞ்சப்பேட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம மகளிர் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், மற்றும் சமுதாயக் குழு உறுப்பினர்கள், சேகர், ரமேஷ் உள்பட கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

More from the section

லஞ்சம் வாங்கிய நிலஅளவையருக்கு 2 ஆண்டுகள் சிறை
மூலங்குடி கோயிலில் பௌர்ணமி வழிபாடு


தேர்தல் பணிகள்: திமுக ஆலோசனை

அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
ஆலங்குடி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் சாவு