புதன்கிழமை 23 ஜனவரி 2019

சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் ஆய்வு

DIN | Published: 12th September 2018 07:45 AM

புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எம்.பிரகாஷ் பங்கேற்றுப் பேசியது: தமிழக அரசு சிறுபான்மையினர் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
புதுகை மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம்  வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு ரூ.20,000 அரசின் நிதியுதவி வழங்கும் திட்டம், தனிநபர்  தொழில்கடன் , குழுக்கடன், புதுக்கோட்டை மாவட்டம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள், உலமாக்கள் , பணியாளர்  நலவாரியம் மூலம் வழங்கப்பட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து  இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
மேலும் சிறுபான்மையினர் சமுதாய மக்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளனவா என்று கேட்டறியப்பட்டது. தமிழக அரசு சிறுபான்மையினர்  நலனுக்காக தொடர்ந்து பல்வேறு சிறப்பான திட்டங்களை   செயல்படுத்தி வருகிறது. கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லும் திட்டத்தின் கீழ் தற்போது  ஆண்டிற்கு 600 பேர்கள்  செல்கின்றனர். இதன் மூலம் இது வரை 4000 பேர்கள்  புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாகூர்  தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழக அரசு 40 கிலோ சந்தன கட்டையை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இதேபோல்,  சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்பபடும் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

More from the section

பயிர்க் காப்பீடு: நாகுடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மாணக்கர்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்
"போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள பாடங்களை புரிந்து படித்தல் அவசியம்'
தைப்பூசம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, தீர்த்தவாரி
நிவாரணம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்னா