புதன்கிழமை 16 ஜனவரி 2019

புதுகை தெற்கு மாவட்ட திமுக ஆலோசனை

DIN | Published: 12th September 2018 07:47 AM

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுகையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ரகுபதி தலைமை வகித்தார். ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திமுக தலைவராக பொறுப்பேற்ற முக.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. குட்கா ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர், அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வெளியிடப்பட்டு உள்ள வாக்காளர் பட்டியலில் 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளர்களை சேர்க்கவும், போலி வாக்காளர்களை நீக்கவும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் ,  கட்சி நிர்வாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். திமுக  முப்பெரும் விழாவில் புதுகையில் இருந்து  ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளவேண்டும்.
திமுக நிர்வாகிகள் யாரும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

More from the section

ஆன்மிக நூல்கள் வெளியீட்டு விழா
முந்திரி சாகுபடி கருத்தரங்கு
புதுகையில் சாலை பாதுகாப்பு வார விழா
முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா
தேசிய கைப்பந்துப் போட்டி: வெள்ளி வென்ற புதுகை மாணவி