வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

பொன்னமராவதியில் 15-இல் விநாயகர் சிலைகள் கரைப்பு

DIN | Published: 12th September 2018 07:46 AM

பொன்னமராவதியில் விநாயகர் ஊர்வலம் மற்றும் விநாயகர் சிலை கரைக்கும் வைபவம் 15 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. 
பொன்னமராவதி விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் சார்பில் சிவன் கோயில் திடலில் 13 ஆம் தேதி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை விழாக்குழு சார்பில் அன்னதானம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, சனிக்கிழமை மாலை விநாயகர் சிலைகளது ஊர்வலம் நடைபெற உள்ளது. ஊர்வலத்திற்கு விழா குழு தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகிக்கிறார். முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்எம்.ராஜா ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார். 
பாஜக மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி முன்னிலை வகிக்கிறார். ஊர்வலத்தில் நேதாஜி இளைஞர் மன்றம், இந்திரா நகர், பூக்குடி வீதி, பாலமேடு வீதி, நகைக்கடை பஜார் உள்ளிட்ட 15 விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்து அமரகண்டான் குளத்தில் கரைக்கும் வைபவம் நடைபெற உள்ளது.
 

More from the section

கஜா நிவாரணம் கோரி காந்தி நகரில் மறியல்
நம் காலத்துக்கேற்ப பொருள்களை தந்து கொண்டிருக்கிறது திருக்குறள்
மாசிமகம் : 33 அடி உயர குதிரை சிலைக்கு மாலை அணிவித்து பக்தர்கள் வழிபாடு 
புதுகை பல்லவன் குளத்தில் தெப்பத் திருவிழா
கந்தர்வகோட்டையில் சிதலமடைந்த ஒன்றிய அலுவலகக் கட்டடம் இடிப்பு