சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ரஃபேல் ஊழல்  விசாரிக்கக்கோரி ஆட்சியரிடம் காங்கிரஸார் மனு

DIN | Published: 12th September 2018 07:47 AM

ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரனை நடத்த வேண்டுமென புதுகை மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விசாரனை நடத்தி  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, புதுகை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆட்சியர் சு. கணேஷிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், அக்கட்சியின் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராம.சுப்புராம் தலைமையில் மாவட்டத் தலைர்கள் தர்ம.தங்கவேல், முருசேகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி. புஸ்பராஜ், வழக்குரைஞர் சந்திரசேகரன் உள்ளிட்ட அக்கட்சியினர் ஊர்வலமாக சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
 

More from the section

அரசுப் பள்ளி முன்பு மாணவர்கள், பெற்றோர் தர்னா
விதிகளை மீறியதாக 8 விசைப்படகுகள் பறிமுதல்
திருவள்ளுவர், வள்ளலாரை தமிழர் அடையாளமாகக் கொள்ள வேண்டும்: கவிஞர் அறிவுமதி
அரசுப் பள்ளியில்  உலக தாய்மொழி தினப் போட்டிகள்
அரசுப் பள்ளிகளுக்கு கல்விச்சீர் அளிப்பு