வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி வாய்ப்பு

DIN | Published: 19th February 2019 09:56 AM

புதுக்கோட்டை  மாவட்டத்தில்  வன்கொடுமையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கான மத்திய அரசின் தரமான சேவை மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் மத்திய அரசால் தரமான சேவை மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  நிர்வாகி பணியிடம் - முதுநிலை சட்டப்படிப்பு, 5 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும். தொகுப்பூதியம் ரூ. 30 ஆயிரம்.  முதுநிலை ஆலோசகர் - முதுநிலை  சமூகப் பணி பட்டம், மருத்துவ உளவியல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. தொகுப்பூதியம் ரூ.20,000  ஆகிய பணியிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள்  தட்டச்சு செய்த விண்ணப்பத்தை  வரும் பிப். 25-க்குள் மாவட்ட சமூக நல அலுவலர், ஆட்சியர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04322 - 222270.

More from the section

லஞ்சம் வாங்கிய நிலஅளவையருக்கு 2 ஆண்டுகள் சிறை
மூலங்குடி கோயிலில் பௌர்ணமி வழிபாடு


தேர்தல் பணிகள்: திமுக ஆலோசனை

அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
ஆலங்குடி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் சாவு