வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டம்

DIN | Published: 19th February 2019 09:57 AM

தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தின்  அவசர செயற்குழு கூட்டம்  சங்க அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.  
கூட்டத்தில்  சங்கத்தின் நிறுவனத் தலைவர்  இரா.போசு மற்றும் மாநில பொதுச்செயலாளர்  எஸ்.செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், பிரதமரின் பி.எம்.  கிஸான் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளைத் தேர்வு செய்வது குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தெளிவான வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும். 
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது. இதன் நகல் வருவாய்த் துறை அமைச்சர், வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.  மாவட்டச் செயலாளர் எம்.உலகநாதன் நன்றி கூறினார்.
 

More from the section

திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றுக் காகிதம்
350 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
கணினி மூலம் தேர்தல் பணிகள்  ஒதுக்கீடு
கீரனூரில் திமுக பொதுக்கூட்டம்
எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி